spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!

பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!

-

- Advertisement -

பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பட்டாபிராம் ஆயல்சேரி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ரெட்டைமலை சீனிவாசன் (27). இவரது தம்பி ஸ்டாலின் (24). சரித்திர பதிவேடு குற்றவாளிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று மாலை ரெட்டமலை சீனிவாசன் மற்றும் அவரது தம்பி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த  இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்கள், ரெட்டைமலை சீனிவாசன் மற்றும் அவரது தம்பி ஸ்டாலினை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்,  துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில், குற்றத்தை தடுக்க தவறியதாக பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுள்ளர். பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜயராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சோழவரம் காவல் ஆய்வாளர், திருவேற்காடு காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடி காவல் ஆய்வாளர்கள் 6 பேர் அதிரடி மாற்றம்- ஆணையர் உத்தரவு

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியை கைதுசெய்யவும், சிறையில் அடைக்கவும் காவல் ஆணையாளர் சங்கர் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவு அளித்துள்ளார். அதனை பின்பற்றாததால் பட்டாபிராம் காவல் ஆய்வாளருக்கு உட்பட்ட காவல் எல்லையில் இரட்டை கொலை நடந்துள்ளது. இதன் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சட்டம், ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினை விவாகரத்தில் கவன குறைவாக இருந்தால் இனி இதுபோன்று கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ