spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிமின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி

மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி

-

- Advertisement -

மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலிமின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி காமாட்சி/42.இவர் முகப்பேர் ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளர் பணி செய்து வந்தார்.

we-r-hiring

இவரது கணவர் 2017 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில்/12 வயது மகனுடன் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சொந்த காரணங்களுக்காக வெளிமாநிலம் செல்ல திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரயில்வே போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது

MUST READ