spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிசரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை - போலீசார் தீவிர விசாரணை

சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை

-

- Advertisement -

ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை

ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ரவுடி கொடூரமாக கொலை - போலீசார்  தீவிர விசாரணைநேற்று முன்தினம் இரவு கண்ணியம்மன் நகரில் உள்ள மாந்தோப்பில் நண்பர்களுடன் சிலர் மது அருந்தி உள்ளனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அடித்து கல்லை கொண்டு தலையில் போட்டு கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சோழவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி விக்கி என்பதும், இவன் மீது புறநகர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

we-r-hiring

ரவுடி கொடூரமாக கொலை - போலீசார்  தீவிர விசாரணைஇந்நிலையில் உயிரிழந்த ரவுடி விக்கியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு,ரவுடியை அழைத்து வந்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என சம்பவ இடத்தில்  காவல் துறையினர் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி ஒருவர் முகம் சிதைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ