ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழிந்தார்.
ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்(29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி பிரியா(25). இத்தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரூபாவாதி(5) தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை,ரூபாவாதி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது பிரிட்ஜில் தின்பண்டம் எடுப்பதற்காக திறந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த சிறுமி மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த பிரிட்ஜை திறந்து போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுமி மயக்கமடைந்தாள்.
அருகில் இருந்த தாய் பிரியா,மகளை மீட்டு, ஆவடி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் சிறுமி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில் மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!
ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.