Homeசெய்திகள்ஆவடிஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

-

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவி ஊழியர் சங்கத்தின் ஆவடி வட்ட செயலாளர் ரவிக்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் சத்திய நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்

அம்ச கோரிக்கைகள்:

தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிக்கான ஊதிய உயர்வு மற்றும் பணியிலிருந்து இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மற்றும் போக்குவரத்து ஊதியப்படி வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட 2500 ரூபாய் திரும்பவும் நிறுத்தாமல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த கவன ஈர்ப்பார்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டஆவடி சுற்றுவட்டார பகுதி கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

MUST READ