போதை இல்லாத தமிழகம் என்பதை நிறைவேற்றும் விதமாக ஆங்காங்கே போலீஸார் அதிரடி சோதனைகள்.
போதை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகும் அவலத்தை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் அடிப்படையில் இன்று ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட ஆவடி காவல் நிலைய பகுதிகளில் போலீசார் திடீர் கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர்.இதில் ஆவடி பருத்திப்பட்டு ஏரிக்கு அருகாமையில் உள்ள பூங்கா மற்றும் கைவிடப்பட்ட நூலக கட்டிடம், அரசு பள்ளி உட்பட 5க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திறிந்த 3 வாலிபர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் காமராஜர் நகரை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என்பதும், அவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதே போன்ற அதிரடி கஞ்சா சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


