Homeசெய்திகள்போலீசாரிடம் மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு!

போலீசாரிடம் மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு!

-

ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையின் போது மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு! ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்!

சென்னை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஓட்டேரி எஸ் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த குணசேகர் 41 என்பவர் அவ்வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் குணசேகரன் பாஜக கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.

போலீசாரிடம் மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு!

போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதை பார்த்து அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு போலீசாரிடம் சென்று ஏன் சாலையில் தடுப்புகளை அமைத்து உள்ளீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இரவு நேரங்களில் இவ்வாறு தான் வாகன சோதனை மேற்கொள்ளபடும் என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா அவரை அழைத்துச் சென்று ஆட்கள் நடந்து செல்வதற்கு வழி உள்ளது ஏன் இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

மேலும், அப்போது நடந்த சம்பவங்களை வீடியோ பதிவாகவும் போலீசார் எடுத்துள்ளனர். இதனால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சிறிது நேரம் கழித்து சென்றுவிட்டார்.

போலீசாரிடம் மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு!

அதன் பிறகு அவர் வீட்டிற்கு சென்று வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். அதில் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா என்னை தகாத முறையில் பேசியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் இதற்கு அவர் பதில் சொல்லி ஆக வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

மேலும் போலீசார் கமிஷனரை ஏமாற்றலாம் டிஜிபியை ஏமாற்றலாம் ஆனால் மனித உரிமை ஆணையத்தை ஏமாற்ற முடியாது என முழு மது போதையில் அவர் பேசிய ஆடியோ வைரலானது.

இதனை அடுத்து நேற்று காலை 11 மணிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற குணசேகர் அங்கு கழுத்தின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தாக்கியதாகவும் கூறி சிகிச்சை பெற்று அதன் பிறகு மருத்துவ சீட்டோடு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

போலீசாரிடம் மது போதையில் பாஜக நிர்வாகி தகராறு!

இதனையடுத்து சில பாஜகவினர் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு நாங்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட போகிறோம். கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம் என மிரட்டியுள்ளனர்.

குணசேகர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாஜக நிர்வாகி பேசிய ஆடியோ மற்றும் போலீசார் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ