Homeசெய்திகள்சென்னைசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் - உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

-

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த நீதிபதி பணியிடக் காலியிடங்களுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் - உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75 ஆகும். இதில் தற்போது 23 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என மொத்தம் 19 பேரின் பெயர்கள் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் மாவட்ட நீதிபதிகள் எஸ்.அல்லி (தலைமை பதிவாளர்), முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

we-r-hiring

அதேபோல், வழக்கறிஞர்கள் தரப்பில் என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ. மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே. அப்பாதுரை, ஆர். அனிதா உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இந்த பரிந்துரைகள் குறித்து உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கான 19 நீதிபதி நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த கட்டமாக மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வ நியமன உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்டநாள் நிலவி வந்த நீதிபதி பணியிடக் குறைவு பெருமளவில் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

MUST READ