Homeசெய்திகள்சென்னைஇந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.30 லட்சம் வழங்கிய முதல்வர்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.30 லட்சம் வழங்கிய முதல்வர்

-

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.30 லட்சம் வழங்கிய முதல்வர்

தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்க்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Image

சென்னை தலைமைச் செயலகத்தில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

முதல்வருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ், “இன்று முதலமைச்சர் மற்றும்ம் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதலமைச்சர் எனக்கு வழங்கினார். மேலும் செஸ் எலைட் டிமில் என்னை இணைத்துள்ளனர்.  என்னுடைய பள்ளி மற்றும் தமிழ்நாடு அரசு எனக்கு உறுதுணையாக இருந்தது.  இதேபோன்று அரசு தரப்பில் விளையாட்டு வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தால் செஸ் போட்டிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செஸ் வீரர்களுக்கு தொடர்ந்து இதேபோல் ஊக்கம் தந்தால் எங்களால் இன்னும் சாதிக்க முடியும்” என்றார்.

இந்திய செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் குகேஷ் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ