spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!

-

- Advertisement -

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு  திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!பிப்ரவரி  மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அனுமதி கிடைத்தால் மினி பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்.

we-r-hiring

தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும்வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு  வெளியிட்டது. தற்போது அந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி மாதத்திற்குள் அனுமதி கிடைத்தால்  சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் அனுமதி கிடைத்தவுடன் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் எந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு 25 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு மினி பேருந்துகளை இயக்குவது குறித்து அனுமதி வழங்கப்படும்.

மேலும் சென்னை மாநகர பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் பகுதிகள் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு இந்த மினி பேருந்துகளுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் போக்குவரத்துறை அதிகாரிகள்  தகவல் தெரிவித்தனர்.

MUST READ