spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு

பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு

-

- Advertisement -

மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10-12 மணி வரை  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலி: காவல்துறை அதிரடி முடிவு

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலரிடம், கடந்த சனிக்கிழமை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் குடிபோதையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சத்தியபாலு என்பவரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

we-r-hiring

இந்த சம்பவம் எதிரொலியாக மின்சார ரயில், பறக்கும் ரயில் வழித்தடங்களில் இரவு 10 மணி முதல் 12 மணி வரை கூடுதலாக ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். குறிப்பாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார ரயில் வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அனைத்து பிளாட்பாரங்களிலும் இரவு 10 மணிக்கு மேல் 12 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!

MUST READ