Homeசெய்திகள்சென்னைஅரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் - கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி

அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் – கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி

-

- Advertisement -

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் காயம் ஏற்பட்டது.

அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் - கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி

இந்நிலையில், மருத்துவர் பாலாஜி குறித்து தீவிர கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியிடம் பேசிய போது, மருத்துவர் பாலாஜி நல்ல நிலையில் உள்ளார். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான support system மும் இல்லாமல் நலமாக உள்ளார். தையல் போடப்பட்ட இடத்திலிருந்து உதிரப்போக்கு இல்லை. நன்றாக தூங்கி எழுந்து காலை உணவு சாப்பிட்டார். அமைச்சர் மா.சுபிரமணியன் பார்க்க வந்த பொழுதுகூட அமைச்சரிடம் நன்றாக பேசினார். “என்னை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து எப்பொழுது மாற்றுவீர்கள்” என்று அவர் கேட்கும் அளவிற்கு நன்றாக உள்ளார்.

கைது செய்யப்பட்டு விக்னேஷின் தாயாரின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு அவர் கூறியதாவது, பாதிக்கப்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் குற்றச்சாட்டாக சொல்லலாம் மருத்துவர் பாலாஜியே வெளியில் வந்து என்ன நடந்தது என்பதை அவர் பேசாத வரை நாம் யூகம் அடிப்படையில் பேசக்கூடாது. அனைத்து மருத்துவமனைகளிலும் இயக்குனர்கள் அறை, டீன்கள் அறையுள்ளது. நோயாளிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாகவே அவர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நோயாளிகளின் நிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எந்தவிதமான விளக்கமும் கவுன்சிலிங்கும் இல்லாமல் எந்த விதமான சிகிச்சையும் ஆரம்பிக்க மாட்டார்கள்.

அதுவும் புற்றுநோய் என்றால் நோயாளிகளுக்கு மட்டுமல்ல அட்டண்டருக்கும் மனதளவில் பாதிப்பு ஏற்படும். அதனால் எடுத்த உடனேயே ஹீமோதெரபி கொடுத்து சிகிச்சையை ஆரம்பிக்க மாட்டார்கள். நோயாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? சிகிச்சை கொடுத்தால் என்ன பக்கவிளைவி ஏற்படும்? உள்ளிட்ட எல்லா நிலையையும் எடுத்துக்கூறி. பிறகுதான் சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். அதனை ஒத்துக்கொண்டுதான் நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

3 முறை 4 முறை ஹீமோதெரபி கொடுக்கும் வரை பேசாமல் தான் இருந்துள்ளர். தற்பொழுது இதுபோன்ற அசம்பாவிதம் நடந்த பிறகு அவரின் அம்மா பேசுவது எப்படி என்று தெரியவில்லை. இந்த மருத்துவமனையில் முதல்வராக நான் இருக்கும் பொழுது இது போன்ற புகார்கள் எதுவும் நோயாளிகளிடமிருந்து வரவில்லை.

தற்போது இந்திய மருத்துவ சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டன போராட்டங்கள் அறிவித்துள்ளனர். அதனால் மருத்துவர்கள் அவர்கள் போராட்டத்தில் இருக்கிறார்கள்.இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை பார்க்க மருத்துவர்கள் இருக்கிறார்கள். கூடிய விரைவில் இது நல்ல முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று கமிஷனர் வருகை தந்திருந்தார். இங்கு ஒரு Out post தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிசிடிவி முறையாக இல்லாதது குறித்து அவர் கூறியதாவது, குறைபாடுகள் இல்லாமல் எதுவும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இந்த மருத்துவமனை ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகிறது. Function-ல் கொஞ்சம் வேலை இருக்கிறது. அது நிவர்த்தி செய்யப்படும்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த கண்டன போராட்டங்களில் நடைபெற இருக்கிறது. நோயாளிகள் பாதிக்கப்பட வேண்டும் என்று எண்ணத்தில் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் சங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள் முடிவெடுக்க முடியாது.

கிண்டி மருத்துவமனையில் முடிந்தவரை என்னென்ன வசதிகள் நோயாளிகளுக்கு செய்து கொடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

டாக்டருக்கு கத்திக்குத்து எதிரொலி : மருத்துவர்கள் வேலை நிறுத்தம்.. தவிக்கும் நோயாளிகள்..!!

 

MUST READ