பூவிருந்தவல்லி அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீா்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கோரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. நஜீப்தின் (36) என்ற இளைஞா்,18 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, கொடூரமாக கொலை செய்தாா். இதன் காரணமாக அந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். கைதான நஜுப்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கை விசாாித்த திருவள்ளூா் முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீா்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளி நஜுப்தினுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஆயுள் தண்டனைகளை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டாா்.



