spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டிய நடிகர் விஜய்!

‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டிய நடிகர் விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய், அமரன் பட இயக்குனரை பாராட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் அமரன்.'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டிய நடிகர் விஜய்! இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். CH சாய் இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதே சமயம் படமானது ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எனவே அமரன் படக்குழுவினரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ஏற்கனவே ரஜினி, சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகிய பலரும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டிய நிலையில் தற்போது நடிகரும் அரசியல்வாதிகமான விஜயும் அமரன் பட இயக்குனரை பாராட்டியுள்ளார். அதன்படி இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

MUST READ