Homeசெய்திகள்சினிமாகார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த ‘பெருசு’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

பெருசு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்த திரைப்படம் தான் பெருசு. இந்த படத்தில் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வைபவுடன் இணைந்து சுனில், நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பாலசரவணன், கருணாகரன், தீபா, விடிவி கணேஷ், முனீஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை இளங்கோ ராம் இயக்கியிருந்த நிலையில் சத்ய திலகம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். அருள்ராஜ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த மார்ச் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. வித்தியாசமான கான்செப்டில் அடல்ட் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?மேலும் வைபவ், சுனில் ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ