spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமம்மூட்டியின் ‘டர்போ’ திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

மம்மூட்டியின் ‘டர்போ’ திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

-

- Advertisement -

மம்மூட்டி நடித்துள்ள ‘டர்போ’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வைசாக் ‘புலிமுருகன்’, ‘மதுர ராஜா’ ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் கொடுத்தவர். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டர்போ’. இந்த படத்தில் மம்மூட்டி, ராஜ் பி ஷெட்டி, சுனில், சித்திக், அஞ்சனா, திலீஷ் போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்து இந்தப் படத்தை மம்மூட்டியே தயாரித்துள்ளார். மிதுன் இமானுவேல் தாமஸ் படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்.

இப்படம் கடந்த மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது. மொத்தம் ரூ.70 கோடி வசூலை தந்தது. திரையரங்குகளில் வெளியாகி 2 மாதங்களாகியும் ஓடிடிக்கு இன்னும் வரவில்லை.

‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

we-r-hiring

தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் காண முடியும் என தெரிவிக்கின்றனர்.

MUST READ