Homeசெய்திகள்சினிமாசிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்!

சிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்!

-

வாழ்நாள் கனவு நனவானது, சிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்! ரசிகரை சமாதானப்படுத்திய சிலம்பரசன்!

கடந்த செவ்வாய்கிழமை (18-ம் தேதி) நடிகர் சிலம்பரசன், தன் ரசிகர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்த சந்திப்பு நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தின் வெற்றி சமயத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க சிம்பு திட்டமிட்டார். ஆனால் அப்போது கொரோனா பரவல் காரணமாக அந்த சந்திப்பு ரத்தானது.

சிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்!

சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளை மட்டும் நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டு, அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி அம்மன்ற நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை தியாகராயர் நகர் வந்து நடிகர் சிலம்பரசனை சந்தித்தனர். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு தன்னை பார்க்க வந்த நிர்வாகிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அதனை நடிகர் சிலம்பரசனே பரிமாறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

சிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்!அப்போது புகைப்படம் எடுக்க வந்த சார்லஸ் கென்னடி என்பவர் சிம்பு முன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவரை சமாதானப்படுத்தி, தோளில் கைபோட்டு புகைப்படம் எடுக்க வைத்தார். அதை சார்லஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

‘வாழ்நாள் கனவு நனவான தருணங்கள். உன் முகத்தை பார்த்ததும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வருடங்களில் நான் பல போராட்டங்களை எதிர்கொண்டேன். இந்த ஒரு நிமிடத்திற்காக நான் நீண்ட வருடங்கள் காத்திருந்தேன்’ என பதிவிட்டிருந்தார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ