ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள் ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்திற்கு ஆனைமலை, கோட்டூர் மற்றும் பொள்ளாச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 98 விவசாயிகள் மொத்தம் 577 மூட்டை கொப்பரைகளைக் கொண்டு வந்திருந்தனர். அவைகள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.
இதில் முதல் தர கொப்பரை 278 மூட்டை ரூ.191 முதல் ரூ.206 வரையிலும், 299 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ரூ.151 முதல் ரூ.175 வரையிலும் 259 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 8 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
காதல் வலையில் வாலிபர்களை விழ செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது…
