ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடக்கசீரா மண்டலம் அமைதலகொண்டி கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் அங்குள்ள அரசு ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சேத்தன்குமார் பள்ளி முடிந்து வீட்டிற்கு வராததால் பெற்றோர் ஆசிரியர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பின்னர் மடக்கசீரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் பல இடங்களில் சேத்தன்குமார் போட்டோவை பல காவல் நிலையத்திற்கு அனுப்பி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மடக்கசீராவில் உள்ள கர்நாடகா மாநில எல்லையில் வனப்பகுதியில் கைகள் கட்டிய நிலையில் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன சேத்தன்குமார் என்பது உறுதி செய்தனர். பள்ளிக்கு சென்ற சிறுவன் காணாமல் போனதாக கருதப்பட்ட நிலையில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் திருமண வீடியோ ஒப்பந்தம்….. மறுப்பு தெரிவித்த நாக சைதன்யா!