- Advertisement -
ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையில் நின்று கொண்டு குச்சியால் தட்டி விட்டு செல்போன் பறித்த வழக்குகளில் பழைய வண்ணாரப்பேட்டை சுந்தரேசன் (24), மற்றும் ரஞ்சித் (32) ஆகிய இருவரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவா்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் இறக்கும் போது தான் அவருடைய கேரக்டர் பிறக்கிறது…. ‘வா வாத்தியார்’ குறித்து ஆனந்தராஜ்!


