வீட்டில் இருந்தே (Work from home) பணி புரியும் பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னையில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியரை ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள பிரபல அமேசான் (AMAZON) நிறுவனத்தில் கணினி சாதனங்கள் கையாளும் நிபுணராக 6 ஆண்டு காலமாக பணியாற்றிவருகிறார் சுல்தான். இவருடன் பணி புரியும் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த டிச. 4 ஆம் தேதி முகமது சுல்தான் , புதியதாக ஒரு மின்னஞ்சல் மூலம் கார்த்திகாவை தொடர்பு கொண்டு ,அவரது மொபைலை ஹேக் செய்ததும் ,சமூக வலைதளங்களில் அந்தரங்க புகைப்படங்களை பரப்பிவிடுவதாகவும் மற்றும் அவர் யாரிடமும் பேச கூடாதென மிரட்டி வருவதாகவும் ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் ஆணையர் சங்கர் அவர்களிடம் கார்த்திகா இணையவழி குற்ற பிரிவில் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புகாரின் அடிபடையில் முகமது சுல்தான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் முகமது சுல்தான் அய்யப்பன்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இன்று (டிச.8) மதியம் ஆவடி காவல் ஆணையரக இணைய வழி குற்றப்பிரிவு அலுவலகத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணை தொடர்ந்த போது அவரது கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் சோதனை செய்யப்பட்டது.
அதில் கடந்த 10.09.2023 ஆம் தேதி அன்று கார்த்திகாவின் வீட்டிற்கு சென்று அவருடன் Work from home முறையில் இருவரும் ஒன்றாக பணி புரிவதற்காக சென்றது தெரிய வந்துள்ளது. அப்போது கார்த்திகாவிற்கு தெரியாமல் அவரது படுக்கையறையில் முகமது சுல்தான் தனது கைபேசி (iphone pro) கேமராவை ஆன் செய்து வைத்து அவரது அந்தரங்க புகைப்படங்களை எடுத்துள்ளது கண்டறியபட்டுள்ளது.
நேற்று (டிச.7) கார்த்திகாவை மிரட்டி மேலும் ஆபாசமான புகைப்படங்களை மாற்றி அனுப்பியதை வைத்து, 10.09.2023 முதல் 07.12.2023 வரை இச்செயலை தொடர்ந்துள்ளார் என்பதை அறிந்த போலீசார் முகமது சுல்தான் -ஐ இன்று (டிச.8) மதியம் கைது செய்தனர். பின்னர் முகமது சுல்தான் குடும்பத்தினர்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற விதிமுறைகள் படி முகமது சுல்தான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.