சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி உதயகுமார் (வயது 30 ) . இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் எம் .ஆர். நாயுடு இரண்டாவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
பலத்த வெட்டு காயத்துடன் இரத்த வெள்ளத்தில் துடித்த அவரை காப்பாற்ற அருகிலுள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த வில்லிவாக்கம் காவல் நிலைய உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில், பிரபல ரவுடி ரஞ்சித் (எ) டபுள் ரஞ்சித் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டதில் உதயகுமார் முக்கிய பங்கு வகித்ததால் ரஞ்சித்தின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக உதயகுமார் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட உதயகுமார் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். எனவே வில்லியவாக்கம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.