Homeசெய்திகள்க்ரைம்உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற...

உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி

-

- Advertisement -
உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி
கொடூர மனைவி கீர்த்தனா

ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது. கள்ளக்காதலனின் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ காதல் கணவனை கொடூரமாக கொன்ற கீர்த்தனவால் இரண்டு குழந்தைகள் அனாதையாக சோகம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33)  இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (28) இவர்களுக்கு கவீன், தரன்ஸ்ரீ உள்ளிட்ட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுநர் மோகன்ராஜ்  வாரம் இரண்டு முறை மட்டுமே பணி முடிந்து வீட்டுக்கு வரும் நிலையில் அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கதிரேசன் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக மோகன்ராஜ் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணிக்கு சென்று திரும்புவதால் தன்னுடைய கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் கீர்த்தனா வேதனை அடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தனா கணவனின் சொத்துக்காகவும், கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழவும் மேலும் காதல் கணவனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் கடந்து 10 நாட்களுக்கு முன்பு பேருந்து பணிக்கு சென்ற மோகன்ராஜ் பணி முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் குழந்தைகள் மனைவியுடன் உணவு அருந்திவிட்டு படுத்து உறங்கியுள்ளார்.

காலை எழுந்து பார்க்கும் பொழுது  கோவிந்தராஜ் உடலில் காயங்களுடன் சடலமாக இருந்துள்ளார். இது தொடர்பாக மோகன்ராஜின் சகோதரி சரண்யா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்ததை அடுத்து  ஆயில்பட்டி காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர் விசாரணையில் மனைவி கீர்த்தனா கள்ளக்காதலன் கதிரேசன் உள்ளிட்ட இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து இரண்டு பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி
கைது

மனைவி கீர்த்தனா காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில்  கணவன் மோகன்ராஜ் கொலை செய்ய கடந்த 15 நாட்களாக திட்டம் தீட்டி வந்ததாகவும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே 15 தூக்க மாத்திரை கொடுத்தும் சாகாததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து  7 – ம் தேதி இரவு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உயர் அழுத்த மின்சாரம் மூலமாக ஷாக் கொடுத்தும் மோகன்ராஜ் சாகாததால் மனைவி கீர்த்தனா ஈவு இரக்கமின்றி காதல் கணவன் நெஞ்சில் மிதித்து தலையணை மூலம் வைத்து உயிர் போகும் வரை அமுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி
கீர்த்தனா வேதனை

மோகன் ராஜன் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக ஆயில்பட்டி காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ