வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி வருவதாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படை குழுவினர் மற்றும் அய்யலூர் வனப் பணியாளர்கள் இணைந்து மாரம்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டு முயல் ஒன்றினை வேட்டையாடிய 3 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மாரம்பாடி அருகே உள்ள கோட்டைமந்தையை சேர்ந்த டேவிட் அந்தோணி(வயது 22), கிறிஸ்டோபர் பிரபு(24), அருள்ராஜ்(19) என்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அய்யலூர் வனத்துறையினர் அவர்கள் 3 பேர் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, ஆளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஏர் கண் துப்பாக்கி, இரண்டு டார்ச் லைட் மற்றும் முயல் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
80 சவரன் நகை 38 லட்சம் பணம்…பேராசையால் பறிகொடுத்த மருத்துவரின் மனைவி