spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி

செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி

-

- Advertisement -

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி!சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில் வசித்து வரும் விஜயகுமார் (35) இவர் கொளுத்து வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இளவரசி (32) இவர்களுக்கு விக்னேஷ் (6) சதீஷ்குமார் (3) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் கட்டிட வேலைக்காக சென்று விடுவதால், அப்பொழுது இளவரசி வீட்டருகே உள்ள ஒரு வாலிபருடன் பேசி வருவதாகவும், தகாத உறவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையறிந்த விஜயகுமார் இளவரசியை கண்டித்துள்ளதாகவும் இதனால் அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், விஜயகுமார் வெளியே சென்றதை அறிந்த இளவரசி தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டருகே உள்ள பயன்படுத்தப்படாத ஆழமான செப்டிக் டேங்க் தண்ணீரில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொள்ள நின்றுள்ளார்.

we-r-hiring

அப்பொழுது வீட்டருகே உள்ள உறவினர் பெண் ஓடி வந்து பார்க்கும் பொழுது தண்ணீரில் மூழ்கி நிலையில் கத்தியது தெரிய வந்தது. உடனே அருகில் உள்ள ஒரு கயிறு மூலம் இளவரசியை மீட்டாா். பின்னர் இரண்டு குழந்தைகளும் உள்ளே இருந்தது தெரிய வந்து அருகில் உள்ளவர்களுடன் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவா் குழந்தைகள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தகவலின் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில், வாழப்பாடியின் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது வீட்டு அருகே ஒரு வாலிபருடன் இளவரசி பேசி வந்ததால் ஏற்பட்ட தகராறில் இளவரசி குழந்தைகளுடன் குதித்து, தற்கொலை செய்ய முயற்சித்ததில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததால், இளவரசி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னா் வாழப்பாடிபோலீசாரிடம் குடும்ப தகராறில் குழந்தைகளுடன் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதில் இளவரசி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வாழப்பாடி போலீசார் இளவரசியை கைது செய்து, சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர். இதனால் வாழப்பாடி அத்தனூர் பட்டியில் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு

 

MUST READ