நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.
நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பாண்டி குழந்தையை தத்தெடுக்கும் எண்ணத்திலும் இருந்திருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திய தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குருவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (27) என்பவர் தனக்குத் தெரிந்த இடத்தில் குழந்தைகள் இருப்பதாகவும் அதை எளிதாக தத்தெடுக்க உதவி செய்வதாகவும் கூறி இருக்கிறார்.
இதற்கு ரூ.1.50 லட்சம் பணம் செலவாகும் என சக்திவேல் பாண்டியிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பாண்டி கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரே தவணையாக 1.50 லட்சத்தை சக்திவேலிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சக்திவேல் கடந்த சில நாட்களில் தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாண்டி நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சக்திவேலை தற்போது கைது செய்துள்ளனர். நெல்லையில் குழந்தை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!


