Homeசெய்திகள்மாவட்டம்டிட்வா புயல் - குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும்...

டிட்வா புயல் – குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..

-

- Advertisement -

ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் முழங்கால் அளவு புகுந்த மழை நீரால் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.டிட்வா புயல் - குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல்  எதிரொலியாக ராமேஸ்வர தீவு பகுதி  முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக, வீடுகளுக்குள் முழங்கால் அளவு மழைநீர் புகுந்து தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

தண்ணீர் புகுந்ததால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அவ்வப்போது வீட்டுக்குள் புகுந்து சிறுவர் முதல் முதியோர் வரை அச்சுறுத்தும் நிலை உருவாகியுள்ளது.  மேலும், அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ருவென்வெல்லை பகுதியில் முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்துச்செல்லும் பெற்றோரின் காட்சி  சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி மக்கள், தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிட்வா புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்

MUST READ