Homeசெய்திகள்மாவட்டம்நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…

நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…

-

- Advertisement -

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…

 

we-r-hiring

கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு. இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வனப்பகுதிக்கு அருகிலுள்ள ஆற்றோரக் கோவிலுக்கு நள்ளிரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த காட்டு யானை தாக்கியதில் ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, யானை தாக்கி உயிரிழந்த ரகுவின் மனைவி காளியம்மாளுக்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையில், உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டு யானை தாக்குதலால் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு

MUST READ