2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளாா். காஞ்சிபுரம் தேரடி வீதியில் திரண்டிருந்த பெரும் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டதை காண முடிகிறது” என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டுக்குள் நுழைய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் விமர்சித்தார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “அண்ணா பிறந்த மண்ணில் இருந்து நான் பிரச்சாரம் தொடங்குகிறேன், கலைஞர் பிறந்த மண்ணில் இருந்து தலைவர் தொடங்குகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எங்கிருந்து தொடங்கினார்?” என்று கேள்வி எழுப்பினார். மயிலாப்பூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அவர் பிரச்சாரம் தொடங்கியதையும் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேர்தலை முன்னிட்டு திமுகவின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மக்கள் ஆதரவு தெளிவாக தெரிகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
