spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்

கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்

-

- Advertisement -

பிஹார் மாநிலம் நவாடாவில் வசிக்கும் சந்தோஷ் லோஹர் என்பவர் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ரயில்வே ஊழியர் சந்தோஷ் லோஹர் பீகாரில் உள்ள ரஜௌலியின் அடர்ந்த வனப் பகுதியில் ரயில் தண்டவாளத்தை அமைக்கும் குழுவில் இருந்தார் . ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு, ரயில்வே ஊழியர் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

we-r-hiring

கடித்த பாம்பை திருப்பி கடித்த நபர்

பாம்பு கடித்தால் அதற்கு தீர்வு கொடுக்கும் வகையில், “பாம்பு கடித்தால்  அதனை 3 முறை கடித்துதாக வேண்டும்” என்ற மூடநம்பிக்கை தனது கிராமத்தில் நிலவி வருவதாகவும், இது பாம்பின் விஷத்தன்மையை நீக்குவதாகவும் சந்தோஷ் தெரிவித்துள்ளார். இந்த மூடநம்பிக்கையை நம்பிய சந்தோஷ், பாம்பை கடித்ததால், பாம்பு இறந்து போனது.

 

லோஹர், அதிர்ஷ்டவசமாக, சக ஊழியர்களால் உடனடியாக ராஜவுலி துணைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் மூடநம்பிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

MUST READ