spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாடெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!

-

- Advertisement -

 

டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்!
Photo: ANI

டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

we-r-hiring

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?

டெல்லி மாநில அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 03) இரவு 07.00 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு பாரதிய ராஷ்ட்ரிய சமிதி, அகில இந்திய மஜ்லிஸ், ஆம் ஆத்மிக் கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுஷில்குமார் ரிங்கு ஆவணங்களைக் கிழித்து மக்களவை சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினார். இதையடுத்து, அவரை நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், உள்ளிட்டக் கட்சிகள் ஆதரவுத் தெரிவித்தன.

மசோதா நிறைவேறிய நிலையில், மக்களவை நாளை (ஆகஸ்ட் 04) காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார்?

டெல்லி அரசில் அதிகாரிகளை நியமிப்பதற்கு ஆளுநருக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ