Homeசெய்திகள்இந்தியா'மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு'- விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

‘மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு’- விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

-

 

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!
File Photo

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு விஷம் தரப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!

கேரளா மாநிலம், காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை ஒப்பிட்ட போது கூடுதல் வாக்கு பதிவானது. இது குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டிருந்தனர்.

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!

மேலும், தேர்தல் நடவடிக்கைகள் என்பது மிகவும் புனிதமானதாக இருக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டு இயந்திரம் எப்படி செயல்படுகிறது? அதில் முறைகேடு புரிய முடியுமா? என்ன மாதிரி தொழில்நுட்பம் செயல்படுகிறது? எந்தெந்த அதிகாரிகள் இதில் ஈடுபடுகின்றனர்? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், விவிபேட் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ