spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுத்தாட்டம் போட்ட இந்திய அணியின் வீரர்கள்

குத்தாட்டம் போட்ட இந்திய அணியின் வீரர்கள்

-

- Advertisement -

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலக கோப்பையுடம் தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு சென்ற அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குத்தாட்டம் போட்ட இந்திய அணியின் வீரர்கள்இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றுள்ள காரணத்தால் இந்திய வீரர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த வரிசையில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பந்த் ஆகியோர் டிரம்ஸ் இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனம் ஆடினர் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

இந்திய வீரர்கள் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியாவில் செக்-இன் செய்து, அங்கு சிறிது நேரம் தங்கிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்க உள்ளனர். இந்திய அணிக்காக பிரதமர் தனது அலுவலகத்தில் ஒரு சிறிய விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், மும்பை செல்ல உள்ளனர், அங்கு மரைன் டிரைவில் திறந்த பேருந்து அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இன்று மாலை 5 மணி அளவில் இந்தியா அணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரமாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதனை தற்போது பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா X தளத்தில் வெளியிட்ட ட்வீட் மூலம் உறுதி செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ