spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!

ஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!

-

- Advertisement -

ஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!

தெலங்கானா மாநிலம் பண்டலகுடாவில் விநாயகர் விசர்ஜன விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்டு ஏலத்தில் ஒரு லட்டு ஒரு கோடியே 26 லட்சத்துக்கு விற்பனையானது.

हैदराबाद में गणेश लड्डू की कीमत 1.20 करोड़ रुपये

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் – பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த விநாயகருடன் லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். விநாயகர் விசர்ஜனம் செய்வதற்கு முன்பு லட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் சொசைட்டி மூலமாக பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

we-r-hiring

அவ்வாறு இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஒரு லட்டு ரூல்.1.26 கோடிக்கு ஏலம் போனது. வில்லாவில் உள்ள ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து ஒன்று கூடி அந்த லட்டுவை சொந்தமாக்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு இதே வில்லாவில் நடந்த லட்டு ஏலத்தில் ரூ.60.80 லட்சத்திற்கு லட்டு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

MUST READ