டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் கைது செய்தது. இதனை தொடர்ந்து மார்ச் மாதம் 9ம் தேதி இதே வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கீழமை நீதிமன்றத்தால் அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 17 மாதங்களாக டெ ல்லி திகார் சிறையில் சிசோடியா அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மணிஷ் சிசோடியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மணிஷ் சிசோடியாவுக்கு இரு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இன்ற மாலை டெல்லி திகார் சிறையிலிருந்து மணிஷ் சிசோடியா விடுதலையானார். அவருக்கு ஆம் ஆத்மி எம்.பி,. சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் அதிஷி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.