பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நாளை(14ம் தேதி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.

முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்டு நிதி லிமிடெட் இயக்குனர் தேவநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் மற்றும் நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் குணசீலன் ,மகிமை நாதன், சுதிர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய புகாரில் தேவநாதன் கைது செய்யப்பட்டாலும், கிட்டத்தட்ட 525 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை தேவநாதன் மீது 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும்,
புகார்தாரர்களை ஒவ்வொருவராக வரவழைத்து, விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் உத்தரவு – உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்டு நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தினமும் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
எனவே பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நாளை(14ம் தேதி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.
மயிலாப்பூர் முசிறி சுப்பிரமணியன் சாலையில் உள்ள இசபெல்லா மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நாளை காலை 10 மணிக்கு முகாம் தொடங்குகிறது.
முதலீட்டாளர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் வந்து புகார் மனுக்களை கொடுக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.