Homeசெய்திகள்இந்தியாஜம்மு -காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜம்மு -காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

-

- Advertisement -

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 90 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்திற்கு முதற்கட்டமாக 7 மாவட்டங்களை உள்ளடக்கிய 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில்  61 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், 2ஆம் கட்டமாக 6 மாவட்டங்களை உள்ளடக்கிய 26 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, காஷ்மிர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா,  உள்ளிட்ட 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓமர் அப்துல்லா கந்தர்பால், புட்கம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி ரியாசி, ரஜோரி, பூன்ச் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்,. இந்த நிலையில், காஷ்மீரில் 3ம் கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதி 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ