Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரி தேர்தல்: காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி - திருமாவளவன் அதிருப்தி

புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி – திருமாவளவன் அதிருப்தி

-

- Advertisement -

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு குளறுபடிகள், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி - திருமாவளவன் அதிருப்தி

சலசலப்பை ஏற்படுத்திய உழவர்கரை தொகுதி

we-r-hiring

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விசிக-வுக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகும் அங்குக் களமிறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற மறுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் கண்டனம்

​இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்: ​”புதுச்சேரியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் மனுவைத் திரும்பப் பெற மறுப்பது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸின் இந்த பிடிவாதமான அணுகுமுறை, கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.”

தனித்துப் போட்டி முடிவு?

ஏற்கனவே புதுச்சேரியில் விசிக-வுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கினால் விசிக சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளில் விசிக தனித்துக் களம் காணத் திட்டமிட்டுள்ளது.

​இந்தத் தொகுதிப் பங்கீடு சிக்கல், தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

 

MUST READ