Homeசெய்திகள்இந்தியாடெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…

டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…

-

- Advertisement -

​நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்… ​இன்று காலை 9 மணியளவில் தடையை மீறி பேரணியைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாகவே இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அதைப்பொருட்படுத்தாமல் நேற்றைய தினம் இரவிலிருந்தே ஏராளமான போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரளத் தொடங்கினர்.

​ஐந்தடுக்கு பாதுகாப்பு மற்றும் தள்ளுமுள்ளு
​போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நகர்வதைத் தடுக்கும் வகையில், ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி காவல்துறையினர் ஐந்தடுக்கு தடுப்பு அரண்களை அமைத்திருந்தனர். 500 மீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ​தடுப்பு அரண்களை உடைத்துக்கொண்டு பேரணியாகச் செல்ல போராட்டக்காரர்கள் முயன்றபோது, காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

we-r-hiring

​மெட்ரோ நிலையங்கள் மூடல்
​போராட்டத்தில் ஈடுபட மேலும் பலர் திரள்வதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள ஜன்பத், ராஜீவ் சௌக், பட்டேல் சௌக் மற்றும் மத்திய செயலகம் (Central Secretariat) உள்ளிட்ட முக்கிய மெட்ரோ இரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையங்களில் பயணிகள் ஏறவும் இறங்கவும் தடை விதிக்கப்பட்டது. ​நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கவிருந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டதால் டெல்லியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

மேகதாது விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

MUST READ