அமலாக்கத்துறை மூலம் அரசியல் எதிரிகளை மத்திய அரசு பலி வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இதை எதிர்த்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த பதில் மனுவில் மத்திய அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!
அதில், “அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது; தன்னை கைது செய்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை சமரசம் செய்யப்பட்டுள்ளது. தனது கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி நிதிகளைப் பெற்றதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. கைது நடவடிக்கையின் மூலம் ஜனநாயகக் கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.