கேழ்வரகு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கப்
பச்சரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – அரை கப்
எள் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கேழ்வரகு முறுக்கு செய்யும் முறை:
முதலில் கேழ்வரகு மாவினை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் சலித்த மாவை இட்லி தட்டில் கொட்டி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கேழ்வரகு மாவு வெந்தபின் மாவு சூடாக இருக்கும் சமயத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, எள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். (சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும்)
அதேசமயம் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெயை காய விட வேண்டும்.
இப்போது பிசைந்து வைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து விட வேண்டும் .
மிதமான தீயில் முறுக்கினை வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு முறுக்கு தயார்.
கேழ்வரகில் கால்சியம் சத்துக்கள் நிறைந்திருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த முருங்கை சாப்பிடலாம்.