மாநகராட்சிகளை, மாநகராட்சிகளோடு இணைத்துள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. அப்போது 2025-2026-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மார்ச் 15-ந் தேதி அன்று வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 5-வது நாளாக இன்றும் நடைபெற்றது.
காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை வழங்குவதற்கான திட்டம் உள்ளதா? என்பது குறித்து சட்ட பேரவையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. K.N.NEHRU மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
இதே போல், கேள்வி நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, “கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக் கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியதால் மக்கள் பெரும் அவதிக்குளாகின்றனர். கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழ் நாடு முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதி நேரமாக செயல் படும் நியாய விலைக் கடைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளாா்.
அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், “நியாய விலைக்கடைகளை தொடங்க அரசு விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நமது முதல்வர் ஆட்சி போறுப்பேற்ற பின் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. பிச்சாண்டியின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்” என தெரிவித்துள்ளாா்.
நடுராத்திரி உனக்கென்ன வேலை? அமலாக்கத் துறையை புரட்டி எடுத்த நீதிபதி!