spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது - செல்வப் பெருந்தகை விமர்சனம்

அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது – செல்வப் பெருந்தகை விமர்சனம்

-

- Advertisement -
kadalkanni

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது - செல்வப் பெருந்தகை விமர்சனம்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான கக்கனின் 117-வது பிறந்தநாள், சென்னையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் மூத்த மற்றும் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அழகிரி உள்ளிட்டோர் கக்கனுக்கு மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, வரும் ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்படவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், துரை சந்திரசேகர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கான பணிகள் என்னென்ன?

காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்வது? என்பன குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை,

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கோரமண்டல் ரயில் விபத்து உள்ளிட்ட தொடர் விபத்துகள் நடைபெற்று வருகின்றன என்றார். ரயில்வே துறை அமைச்சர் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் ரயில்வே துறைக்கு வழங்கப்படும் நிதியை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தாமல், சுற்றுலா மாளிகை மற்றும் பங்களா கட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியதையும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் உள்ளிட்டவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்த போது விபத்து நேரிட்ட உடன் துறையிலிருந்து ராஜினாமா செய்ததை நினைவு கூர்ந்த செல்வம், பா.ஜ.க அமைச்சர்கள் ஏன் விபத்து நடந்தவுடன் பதவியை ராஜினாமா செய்யவில்லை என வினவினார்.

சி.ஐ.டி நகர் முதல் தி‌.நகர் வரை உள்ள மேம்பாலத்திற்கு, ‘தியாக சீலர் கக்கன் மேம்பாலம்’ என்று பெயர் வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாக செல்வப் பெருந்தகை கூறினார்.

வரும் 22 அல்லது 23-ஆம் தேதி, விக்கிரவாண்டியில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த இருப்பதாகவும் தி.மு.க இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க, பா.ம.கவை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், பா.ம.க, பா.ஜ.க.விற்கு “B” டீமாக தான் அதிமுக உள்ளது என்றார்.

MUST READ