அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு விரைவில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கு மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்றும், கால நிர்ணயம் தேவையில்லை என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் விளக்கமளித்துள்ளது. உயர்நீதி மன்ற உத்தரவின்படி ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வ மனு பெறப்பட்டுள்ளது. மேலும்,மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. பீகார் தெர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பலு அதிகமாக உள்ளது என்றும், ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு, இந்த பிரச்சனை குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இவ்வழக்கின் விசாரணையை நாளை (ஜூலை 22) ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -