spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி

-

- Advertisement -
kadalkanni

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகரத்தை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

பாஜக அதிக இடங்களை பெறும் என்ற தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் ஆகி உள்ளது. நாட்டு மக்கள் பாஜகவுக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ஆணவம், தொழிலதிபர்களை மிரட்டி வழக்கு பதிந்து பணம் வசூலித்தல், சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் கட்சியில் சேர்க்க வைத்தனர்.

பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரதமராக பதவியேற்க உள்ளார். இது பாஜகவுக்கும், மோடிக்கும் மிக பெரிய அவமானம். மோடி ஒரு சிறந்த மனிதர் என்றால் அவர் அந்த பதவியை நோக்கி சென்றிருக்க கூடாது.

பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

இந்த ஆட்சி குறை பிரசவ ஆட்சியாகத்தான் இருக்கும். 5 வருடம் நீடிக்காது. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் பழமைவாய்ந்த அரசியலில் முதிர்ந்தவர்கள். அவர்கள் மோடியின் சர்வாதிகரத்தை ஏற்றுகொள்ளமாட்டார்கள். வெகு விரைவில் இந்த ஆட்சி கலைந்துவிடும். கூட்டணி கட்சிகளே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியில் குறைவான வாக்குகள் பெற்றுள்ளனர். மக்களுக்கு இந்த அரசின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை.

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி (apcnewstamil.com)

இந்த ஆட்சியாளர்களின் ஊழலான ஆட்சி, மோசமான ஆட்சி, மக்களை மதிக்காத ஆட்சி என்பதால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றார்.

MUST READ