spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

-

- Advertisement -

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில். அதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் ஒலிபரப்பு செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

we-r-hiring

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் எந்த சங்கடமும் இல்லை” என தெரிவித்தார். அதிமுகவினர் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி டிவிஷன் வாக்கெடுப்பை கோரினார்.

துணை சபாநாயகர் கூ. பிச்சாண்டியின் தலைமையில் டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக பேரவை கதவுகள் மூடப்பட்டு, பகுதி வாரியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இறுதியில், ஆளும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை சபாநாயகர் அப்பாவுக்கு ஆதரவளித்தன. இதன் விளைவாக, அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததது.

சட்டப்பேரவையிலேயே செங்கோட்டையனை ஓரம் கட்டிய 4 எக்ஸ் அமைச்சர்கள்: தர்ம சங்கடத்தில் எடப்பாடியார்..!

MUST READ