spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்

-

- Advertisement -

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.

we-r-hiring

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்

டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றில் மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். சாப்பிட்டுக் கொண்டே அவர் கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் செல்லூர் ராஜு ராகுல் காந்தியின் புகைப்படத்தை X தளத்தில் பகிர்ந்து “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்!!!” என பாராட்டி உள்ளார்.

(3) Sellur K Raju on X: “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!! https://t.co/3pGpxN9rDS” / X

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழும் என கூறப்படும் நிலையில் செல்லூர் ராஜுவின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதனுடையே ராகுல் காந்தியின் எளிமையை பார்த்து பாராட்டியதாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ