Homeசெய்திகள்அரசியல்மாநில அந்துஸ்து கிடைத்தால் மட்டுமே அரசு முழுமை பெறும் - சிவா வலியுறுத்தல்

மாநில அந்துஸ்து கிடைத்தால் மட்டுமே அரசு முழுமை பெறும் – சிவா வலியுறுத்தல்

-

- Advertisement -

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.இன்று 16-வது முறையாக, அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநில அந்துஸ்து கிடைத்தால் மட்டுமே அரசு முழுமை பெறும் - சிவா வலியுறுத்தல்புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் தனிநபர் தீர்மானத்தை பேரவையின் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாக தியாகராஜன், காங்கிரஸ் உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு கொண்டு வந்தனர். இதனை அரசு தீர்மானமாக கொண்டு வர கோரினார்கள்.

மாநில அந்துஸ்து கிடைத்தால் மட்டுமே அரசு முழுமை பெறும். மாநில அந்துஸ்து கிடைத்தால் சுதந்திரம் கிடைத்தது போல் இருக்கும். அனைத்து உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று வலியுறுத்த வேண்டும். தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.

இதனையடுத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, திமுக உறுப்பினர்களின் தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என்றார். ஏற்கனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 15 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று 16-வது முறையாக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர் எஸ்சி டிராக் பெரியார் பி.சி டிராக்! தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! திருமா நெகிழ்ச்சி!

MUST READ