விடுதலை போன்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களுக்கு அரசும் தமிழ் திரை உலகத்தினரும் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக விரோத கும்பல் படைப்பாளிகளுக்கு எதிராக பேசினால், படைப்பாளிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே பாஜக தலைவர் அண்ணாமலை நாடகம் ஆடுகிறார் என அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்துள்ள விடுதலை திரைப்படங்கள், உலகத்தரம் வாய்ந்த படைப்பாக உள்ளதென்றார். காஷ்மீர் ஃபைல், கேரளா ஸ்டோரீஸ் போன்ற பொய்யான தகவல்களை வைத்து படங்கள் வந்துள்ள நிலையில், விடுதலை படம் தமிழர்கள் கொண்டாட வேண்டிய படமாக உள்ளது என திருமுருகன் காந்தி கூறினர். இது குறித்து தமிழக முதல்வர் பேசி இருக்க வேண்டும்.
வெற்றிமாறனை கைது செய்ய வேண்டும் என்று மதவாத சக்திகள் கூக்குரல் இடும் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகம் இதற்கு அமைதி காப்பது வருத்தமாக உள்ளது. இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னிலை இடத்தில் இருக்கும் தமிழ் சினிமா சார்ந்தவர்கள் பேசியிருக்க வேண்டும்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் கூட வலதுசாரி இயக்கங்கள் இது போல் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விடுதலை படத்தை ஆதரித்தும் பேசியிருந்ததை குறிப்பிட்ட திருமுருகன், தமிழக முதலமைச்சர் விடுதலை திரைப்படத்திற்கும் வெற்றி மாறனுக்கும் ஆதரவாக பேசியிருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்து மகாசபை என்ற அமைப்பு வெற்றிமாறன் மீது குற்றச்சாட்டு வைப்பதை சுட்டிக்காட்டிய அவர், சமூக விரோத கும்பல்கள் படைப்பாளிகளுக்கு எதிராக பேசினால், படைப்பாளிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
பாஜக தொண்டர்களை ஆயுதம் தூக்க வேண்டாம் என்று தடுத்து வைத்துள்ளதாக கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை, ஆயுதம் தூக்கும் அளவிற்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று வினவி, தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை எதிர்த்து அண்ணாமலை ஆயுதம் தூக்கட்டும் என்றும் திருமுருகன் காந்தி விமர்சித்தார்.
வன்முறையை தூண்டும் விதமாக பேசிவிட்டு சாட்டையால் அடித்துக் கொள்ளும்
அண்ணாமலை, காலில் செருப்பு போட மாட்டேன் என்று கூறியும் எதற்கு இந்த நாடகம் நடத்துகிறார் என திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினார்.
‘யார் அந்த சார்..? ஏன் மறைக்கிறீர்கள்..?’ பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்..!