Homeசெய்திகள்கேள்வி & பதில்திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

-

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

என். கே. மூர்த்தி பதில்கள்

நந்தா – அம்பத்தூர்
கேள்வி – திராவிட கட்சிகளில் தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் எதிர்காலம் என்னவாகும்?

பதில் – உலகமே வியக்கும் அளவிற்கு சென்னை மெரினாவில் 10 லட்சம் பேர் கூடி போராட்டம் நடத்தினார்கள். அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை எந்த இயக்கம் நடத்தியது? எந்த தலைவர்கள் தலைமை தாங்கினார்கள்? திராவிட அரசியல் என்பது இந்த மக்களின் அரசியல். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றும் இல்லாமல் அழிந்துக்கூட போகட்டும், அப்போதும் திராவிட அரசியல் அழிந்துவிடாது. அது பகுத்தறிவாதிகளின் அரசியல். கூர்ந்து கவனித்து பாருங்கள். காலத்திற்கு ஏற்ற புதுபுது தலைவர்கள் தோன்றுவார்கள்.

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

ஆசைத்தம்பி – பாடியநல்லூர்
கேள்வி – அண்ணாவையும், எம்ஜிஆரையும் ஏற்றுக் கொண்ட பிராமணர்கள், கலைஞரை மட்டும் வெறுக்க காரணம் என்ன?

பதில் – கலைஞரின் அரசியல் வாழ்வின் முக்கிய அடித்தளமாக இருந்தது “பராசக்தி” திரைப்படம் தான். இப்படத்தில் பிராமணப் பாத்திரங்களோ, அவர்கள் குறித்த விமர்சனங்களோ எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் அந்தப் படத்தை காரணமே இல்லாமல் பிராமணர்கள் எதிர்த்தார்கள். அதேபோன்று காரணங்கள் எதுவுமின்றி  கலைஞரையும் எதிர்த்தார்கள்.

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

“பராசக்தி”யில் “கோயில் கூடாது என்பதற்காக அல்ல”, கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்க கூடாது என்பதற்காக”, என்ற வசனத்தை காரணமே இல்லாமல் பிராமணர்கள் எதிர்த்தார்கள். கோயில்கள் எங்களுடைய சொத்து, அங்கே எது நடந்தாலும் விமர்சனம் செய்யக்கூடாது. அது கொடியவர்களின் கூடாரமாகவே இருந்தாலும் உமக்கென்ன? ஏன் கேள்வி கேட்கிறாய் என்ற ஆதிக்க மனநிலையில் கலைஞரை எதிர்த்தார்கள். ஆனால், அவர்களின் வெறுப்பில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ராகவாச்சாரி – மந்தவெளி
கேள்வி – திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

பதில் – இக்கேள்வியை ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நண்பரிடம் கேட்டு அறிந்து கொண்ட உண்மை நிலவரத்தை எழுதியிருக்கிறேன்.

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

அதிமுக என்ற திராவிட கட்சியில் ஜெயலலிதா என்ற பிராமணப் பெண் ஏறத்தாழ 25 ஆண்டுகள் கலைஞருக்கு எதிராக அரசியல் செய்தார். அவரை திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி பாராட்டினார். எனவே, திராவிட இயக்கம் பிராமணர்கள் மீது வெறுப்புணர்வையோ, காழ்புணர்ச்சியோ காட்டவில்லை. அவர்களை ஒதுக்கவில்லை. பிராமணர்களுக்கே உரிய சமூக மேலாதிக்கம், நவீன சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஆக்ரமித்துள்ளனர். அவற்றில் ஜனநாயக நடைமுறையை கொண்டுவர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி தோன்றியது தான் திராவிட இயக்கம். இது நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சில பிராமணர்களுக்கும் பிடிக்கவில்லை. சமத்துவம் என்றாலே பெரும்பாலான பிராமணர்களுக்கு பிடிக்காது, பிடித்ததில்லை. அதை வலியுறுத்துகின்ற திராவிட இயக்கங்களையும்  அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெளிவு படுத்தினார்.

தாஸ் – செங்குன்றம்
கேள்வி – ஏழ்மையை ஒழிக்க திமுக செய்தது என்ன?

பதில் – 1967ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியன் எழுதிய சுயசரிதையை எல்லோரும் வாசிக்க வேண்டும். அதில், திமுக ஆட்சிக்கு வருவதற்கு வெறும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மட்டும் காரணமில்லை. வேலைவாய்ப்பு இன்மை, பஞ்சம், பசி இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் வறுமையை ஒழிக்க பல திட்டங்களை முன்னெடுத்தனர். இந்தியாவிலேயே முதல் முறையாக பொது வினியோகம் (ரேஷன் கடை) திட்டத்தை அறிமுகம் செய்தது திமுக ஆட்சியில்தான். இன்றுவரையிலும் ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி பசியை போக்கி வருகிறது. விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், ஏழை குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞர். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் “டைடல் பார்க்” கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியவரும் கலைஞர் தான்.

அருண் குமார் – விழுப்புரம்
கேள்வி – பெண்களுக்காக கலைஞர் கருணாநிதி செய்த முக்கியமான சாதனை என்ன?

பதில் – கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த 1989ம் ஆண்டு சட்டமன்றத்தில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றினார். இதை இந்தியாவிலேயே முதன்முறையாக கலைஞர்தான் செய்தும் காட்டினார். அதனை தொடர்ந்து 16 ஆண்டுகள் கழித்து 2005ல் இந்தியா முழுவதிலும் நிறைவேற்றுவதற்கு கலைஞர்தான் காரணமாக இருந்தார்.

சூசைராஜ் – கொளத்தூர்
கேள்வி – திராவிட இயக்கங்கள் சாதித்தவை என்ன?

தில் – திராவிட இயக்கம் 1925ல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு இந்த நாடு எப்படி இருந்தது என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அன்றைய அரசாங்க கணக்கெடுப்பில் விதவை பெண்கள் எண்ணிக்கையில் 4 வயது பெண் குழந்தைகளும் இருந்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவ்வளவு மோசமான நிலையில் தான் சமூகம் இருந்தது. பெண் குழந்தைகள் பருவத்திலேயே மனைவியாகவும், வீட்டுப் பணிப் பெண்ணாகவும், பிள்ளைப் பெரும் இயந்திரமாகவும், விதவைகளாகவும், தாசிகளாகவும் இருந்தனர். பெண்களுக்கென்று தனி அடையாளம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் பெரியாரின் ”சுயமரியாதை இயக்கம்” பிறந்தது. காலத்தையும் புரட்டி தலைகீழாக மாற்றியும் காட்டியுள்ளது.

பொன்மாறன்- செங்கல்பட்டு
கேள்வி – கலைஞரின் துணிச்சல் என்றால் எதை சொல்லலாம்?

திராவிட ஆட்சியை பிராமணர்கள் வெறுக்க காரணம் என்ன?

பதில் – இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்று நெருக்கடி நிலை(Emergency)  என்று அறிவித்தார். அந்த நெருக்கடி நிலையை கலைஞர் மட்டும் துணிசாசலாக எதிர்த்தார். மேலும், 24 மணி நேரத்தில் கட்சியின் செயற்குழுவை கூட்டி விடியற்காலை 4 மணிக்கு கலைஞர் தயாரித்த கண்டன தீர்மானத்தை அறிவித்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து இந்தியாவில் முதன் முறையாக சட்டரீதியாக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது கலைஞர் மட்டுமே. அதற்காக 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின்,  முரசொலி மாறன் உள்ளிட்ட 20,000 திமுகவினர் சிறைக்கு சென்றனர். அந்த நெருக்கடி நிலை -யை கூட துணிச்சலாக எதிர்த்தவர் தான் தலைவர் கலைஞர் கருணாநிதி.

அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

 

MUST READ